Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஆகஸ்ட் 4-ம் தேதி மதிமுக பொதுக்குழு..! வைகோ அறிவிப்பு..!!

Senthil Velan
சனி, 20 ஜூலை 2024 (12:03 IST)
மதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
 
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், திருச்சியில் போட்டியிட்ட மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ சுமார் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.   
 
இதைத் தொடர்ந்து, மதிமுகவின் 31-ம் ஆண்டு தொடக்க விழாவையும், மக்களவைத் தேர்தல் வெற்றியையும் கொண்டாடும் வகையில் கட்சிக் கொடியேற்று விழா நிகழ்ச்சிகளை ஜூலை 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடத்த வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி, நிர்வாகிகள் கொடியேற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 

ALSO READ: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகலா.?
 
இந்நிலையில், கட்சியின் பொதுக்குழு தொடர்பான அறிவிப்பை வைகோ இன்று வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மதிமுகவின் 30-வது பொதுக்குழு ஆகஸ்ட் 4-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, அண்ணாநகர் 3-வது அவென்யூ-நியூ ஆவடி சாலை சந்திப்பில் இருக்கும் விஜய் ஸ்ரீ மஹாலில் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெறும் எனத் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

அடுத்த கட்டுரையில்
Show comments