தென் மாவட்டங்களில் இருந்து கிளம்பும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இனி புறப்படாது என்றும் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து தான் கிளம்பும் என்றும் கூறப்பட்டிருந்தது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வட சென்னையில் இருந்து வரும் பயணிகள் வருவதற்கு கடினமாக இருக்கிறது என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தை அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் வடசென்னை மக்களின் வசதிக்காக தற்போது மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களில் உள்ள சில நகரங்களுக்கு பேருந்து சேவை தொடங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அதன்படி மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, சேலம், விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி, கடலூர், திண்டிவனம், புதுச்சேரி, செஞ்சி, திருவண்ணாமலை, வந்தவாசி ஆகிய நகரங்களுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வடசென்னை மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக கிளாம்பாக்கம் வரை செல்ல வேண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது