Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அயோத்தி ராமர் கோவில்.! 7,000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு..!!

ramar temple

Senthil Velan

, வியாழன், 11 ஜனவரி 2024 (10:08 IST)
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க சுமார் 7000-க்கும் மேற்பட்டோருக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
அயோத்தியில் மிகவும்  எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் நாடு முழுவதும் பக்தி பரவசம் உச்சத்தில் உள்ளது. 
 
விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க (ஆர்எஸ்எஸ்) தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் பரிந்துரைக்கப்பட்ட குழுவால், தொடக்க விழாவிற்கான விருந்தினர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, சுமார் 7000-க்கும் மேற்பட்டோருக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
ALSO READ: அனுமன் ஜெயந்தி விழா.! தெப்பக்குளத்தில் ஆறாட்டு வைபவம்.! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!
 
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். 
ராம ஜென்மபூமி இயக்கத்தை முன்னின்று நடத்திய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அறிவுறுத்தலின் பேரில், ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷில் இருந்து அயோத்திக்கு நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. 
 
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆர்எஸ்எஸ், பாஜக நிகழ்ச்சி என்பதால், இதில் பங்கேற்க மாட்டோம் என காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாட்ஸ்அப்பில் 5 நிறங்கள்: பயனர்களுக்கு ஏற்றார்போல் நிறத்தை மாற்றலாம்..!