Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

Advertiesment
வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
, சனி, 2 அக்டோபர் 2021 (10:51 IST)
திமுக முன்னாள் முதல்வர் வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியதை அடுத்து அவருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

திமுகவின் தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா தனது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வீடு திரும்பும் போது மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர்  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் டாக்டர்கள் பரிசோதித்து அவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். வீரபாண்டி ராஜா கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வீரபாண்டி ராஜாவின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் வெளியிட்டுள்ளார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘அருமைச் சகோதரர் வீரபாண்டி இராஜா அவர்கள். இனிமையாய் பழகியும் அருமையான குணத்தாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் இராஜா. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதனைத் திறம்பட செய்து முடிக்கக் கூடியவர். அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் இராஜா. வீரபாண்டி இராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல, தூண் சாய்வது போல!’ என கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் … போக்சோ சட்டத்தில் கைது!