Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமங்கலம் ஃபார்முலா என்பதே தவறு - டென்ஷன் ஆன மு.க.அழகிரி

திருமங்கலம் ஃபார்முலா என்பதே தவறு - டென்ஷன் ஆன மு.க.அழகிரி
, புதன், 27 டிசம்பர் 2017 (11:27 IST)
திருமங்கலம் ஃபார்முலா என அழைப்பது தவறான ஒன்று என மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

 
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார். பிரதான எதிர்கட்சியான திமுக தோல்வி அடைந்தது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி தொலைக்காட்சி ஒன்றில் கருத்து முன்னாள் மத்திய அமைச்சர் தெரிவித்த அழகிரி “செயல் தலைவராக ஸ்டாலின் உள்ளவரை திமுக தேறாது. வேனில் சுற்றி வந்து பேசினால் மட்டும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். களப்பணி ஆற்ற வேண்டும்.  அதை தினகரன் செய்தார். அவரது குழு நன்றாக களப்பணி ஆற்றினார்கள். அதனால் அவர் வெற்றி பெற்றுள்ளார். 
 
காசு கொடுத்து ஓட்டு வாங்கியதாக கூறுகிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கையில்லை. ஸ்டாலினுடன் கூட இருப்பவர்கள் சரியில்லை.  அதனால்தான், தேர்தலில் டெபாசிட் இழக்கும் வகையில் திமுக தோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக, திமுக இரண்டு கட்சியின் மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான், தினகரனுக்கு ஓட்டு போட்டுள்ளனர். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் பணநாயகம், ஜனநாயகம் என பேசுகிறார்கள்.
 
மேலும், எதற்கெடுத்தாலும் திருமங்கலம் என அனைவரும் பேசுகிறார்கள். அது தவறு. அந்த தொகுதியில் திமுக வெற்றி பெற திருமங்கலத்தில் நாங்கள் எவ்வளவு களப்பணிகள் செய்தோம் என்பது எனக்கு மட்டுமே தெரியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை திமுக தேறாது - மீண்டும் மு.க. அழகிரி