Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவீன வசதிகளுடன் தமிழக அரசின் பேருந்துகள்.. பயணிகள் மகிழ்ச்சி..!

Siva
வியாழன், 10 அக்டோபர் 2024 (16:19 IST)
நவீன வசதிகளுடன் பெங்களூருக்கு தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நவீன வசதிகளுடன் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழக அரசின் சார்பில் பெங்களூரு நகருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அதிநவீன வசதிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகிறது  என தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகளில் ஏசி, ஸ்லீப்பர், ஸ்லீப்பர் அல்லாத படுக்கை வசதி கொண்ட செமி-ஸ்லீப்பர் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும், இந்த பேருந்துகள் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இந்த நவீன பேருந்துகளில் வசதியாக செல்லலாம் என்றும், பயணிகள் மத்தியில் இந்த வகை பேருந்துகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்டர் செய்த 15 நிமிடங்களில் டெலிவரி.. அடுத்தகட்ட ப்ளானில் Amazon! - Zeptoவுக்கு போட்டியா?

மம்தா பானர்ஜி தான் பிரதமர் வேட்பாளரா? என்ன நடக்கிறது இந்தியா கூட்டணியில்?

சென்னை விமான நிலையத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை: திருப்பி விடப்பட்ட விமானங்கள்..!

தென்மாவட்டங்களில் இருந்து புறப்படும் ரயில் போக்குவரத்தில் மாற்றம்: முக்கிய அறிவிப்பு..!

இந்த 6 மாவட்ட மக்கள் உஷார்.. காத்திருக்குது மிக பலத்த மழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments