உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், முதல் 250 இடங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இல்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் சார்பில் கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறந்து விளங்கும் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் குறித்த ஆய்வு எடுக்கப்பட்டது. 115 நாடுகளில் உள்ள 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், தற்போது இதன் முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதன்படி, இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், அமெரிக்காவை சேர்ந்த எம்.ஐ.டி பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில், முதல் 250 சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றுகூட இந்திய பல்கலைக்கழகம் இல்லை என்பதும், பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் பல்கலைக்கழகம் 261-வது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.