தடபுடல் விருந்து: அதிமுக முக்கிய தலைகள் ராமதாஸ் வீட்டில் அட்டெண்டென்ஸ்

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (21:17 IST)
அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் பாமக தலைவர் ராமதாஸ் அதிமுகவின் முக்கிய தலைவர்களை விருந்திற்காக தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். 
 
அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது பாமக இப்போது அவர்களுடன் அமைத்துள்ள கூட்டணி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், விமர்சங்களை கண்டுக்கொள்ளாமல் ராமதாஸ் தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு நாளை விருந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  
 
அதிமுக மற்றும் பாமக தலைவர்கள் நடுவே இணக்கம் இருந்தால்தான் தொண்டர்களுக்கு நடுவேயும் இணக்கம் இருக்கும் என்பதுதான் இந்த விருந்தின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000: இந்த ஒரு பிரிவினர்களுக்கு மட்டும் கிடையாதா? தமிழக அரசின் புதிய முடிவு?

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்

அதிக நேரம் Shorts பார்க்கும் பழக்கம்! கட்டுப்படுத்த யூட்யூப் எடுத்த முடிவு!

இந்தியாவின் முதல் வறுமையில்லாத மாநிலம்.. முதல்வர் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments