Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கழுவி கழுவி ஊத்தி புக்கெல்லாம் எழுதுனீங்களே? பாமகவை வச்சு செய்த கமல்

Advertiesment
கழுவி கழுவி ஊத்தி புக்கெல்லாம் எழுதுனீங்களே? பாமகவை வச்சு செய்த கமல்
, வியாழன், 21 பிப்ரவரி 2019 (17:03 IST)
அதிமுகவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பாமக தற்போது அதே அதிமுகவில் இணைந்தது குறித்து கமல்ஹாசன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
 
101 சதவீதம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், இனி திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி நாடாளுமன்றத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜகவோடுக் கூட்டணி அமைத்துள்ளது.
webdunia
 
கடந்த 2017 ஆம் ஆண்டு பாமக நிறுவனர் ராமதாஸ்,  கழகத்தின் கதை என்ற பெயரில் புத்தகத்தை வெளியிட்டார். அதில் அதிமுக தொடக்கம் முதல் அன்று வரை கடந்து வந்த பாதைகள் குறித்தும் அவர்கள் செய்த ஊழல்கள் அனைத்தையும் கூறியிருந்தார்.
 
இது ஒரு புறமிருக்க இவரை மிஞ்சும் விதமாக அவரது மகன் அன்புணி ராமதாஸ் அதிமுக அரசு செய்த 24 மெகா ஊழல்கள் குறித்த முழு விவரங்களை ஆளுனரிடம் சமர்ப்பித்தார். ஜெயலலிதா இருந்த போது நடந்து வந்த ஊழல்கள், எடப்பாடி ஆட்சியில் மெகா ஊழல்களாக பெருக்கெடுத்து ஓடுகிறது என்றெல்லாம் பாமக சகட்டுமேனிக்கு அதிமுகவை விமர்சனம் செய்திருந்தனர். ஆனால் தற்பொழுது அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளனர்.
webdunia
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமலிடம் அதிமுகவின் மெகா கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், மெகா கூட்டணி என்பது மக்கள் முடிவு பண்ண வேண்டியது. முன்பு ஒரு கட்சியை விமர்சித்து புத்தகத்தையெல்லாம் வெளியிட்ட கட்சி தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்திருப்பது சந்தர்ப்பவாத அரசியல். இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
இவர்களின் இந்த சந்தரப்பவாத அரசியலுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என அவர் பேசினார். பாமகவின் இந்த அந்தர் பல்டியால் பாமகவை சேர்ந்த ஒரு பெண் நிர்வாகி கட்சியில் இருந்து விலகிவிட்டார். மேலும் அந்த கட்சியை சார்ந்த பலர் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர்களுமே விரைவில் கட்சியில் இருந்து விலகுவார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் வேண்டுகோள்... 850 கைதிகள் விடுதலை ... சவூதி இளவரசர் உத்தரவு....