Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோயம்பேட்டில் லுலு மால் வருகிறதா? தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தகவல்..!

கோயம்பேட்டில் லுலு மால் வருகிறதா? தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தகவல்..!

Siva

, செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:07 IST)
சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்ட நிலையில் இந்த பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி  திறந்து வைத்தார்.

மிகப்பெரிய பேருந்து நிலையமாக கட்டமைக்கப்பட்டுள்ள இங்கு பல்வேறு வசதிகள் உள்ளது. இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் லுலு மால் அமைய இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லுலு மால் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு தரப்போவதாக பலரும் வதந்தி பரப்புகின்றனர்.

அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற இந்த பொய்த்தகவலை உண்மை என்று நம்பி, அரசியல் கட்சியினர் சிலரும் தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு வீட்டுவசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி  ‘மேற்கண்ட தகவல் முற்றிலும் தவறானது, சித்தரிக்கப்பட்டது’ என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படாது: அரசு அதிரடி அறிவிப்பு..!