Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென் மாவட்டங்களில் வந்த 217 ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் நிறுத்தம்: காவல்துறை அதிரடி..!

Advertiesment
Kilambakkam

Siva

, வியாழன், 25 ஜனவரி 2024 (08:15 IST)
தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்ட 217 ஆம்னி பேருந்துகள்  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டது. 145-க்கும் மேற்பட்ட ஆம்னி  பேருந்துகள் பார்க்கிங் பேவிலும், இதர ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்  நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்மாவட்டம் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்படும் என்றும் ரெட் ஹில்ஸ் மற்றும் பூந்தமல்லி வழியாக செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் மட்டுமே  கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

 சமீபத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட நிலையில் அங்கிருந்துதான் இனி தென் மாவட்ட பேருந்துகள் இயங்கும் என்றும் அதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள்  கிளாம்பாக்கத்தில் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் நேற்று கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்து இயக்க முயற்சி செய்த நிலையில் அந்த பேருந்துகள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை தென் மாவட்டத்திலிருந்து வந்த அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு.. தீ விபத்தால் பலியான சோகம்..!