மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்து தாழ்வு பகுதி இன்னும் ஒரு சில நாட்களில் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட தென் மாநிங்களில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் இந்த மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சமீபத்தில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் ஆகிய இரண்டு கடல்களிலும் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியது என்பதும், தமிழகம் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடலில் மீண்டும் வரும் எட்டாம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.