நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாகவும் மேலடுக்கு காற்றின் சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லார், அடர்லி ஆகிய ரயில் நிலையங்கள் அருகே கனமழை காரணமாக தண்டவாளத்தின் மீது பாறைகள் சரிந்து உள்ளது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை நிலவரத்தை பொறுத்து நவம்பர் 7ஆம் தேதி காலை மீண்டும் ஊட்டி ரயில் சேவை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.