வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில், சற்றுமுன் காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி நிலவியதாகவும், அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று உருவாகும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இன்று காலை, இந்திய வானிலை ஆய்வு மையம் காற்றழுத்த தாழ்வு உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு உருவாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்திற்கு நாளையும் நாளை மறுநாளும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்க கடலில் இன்று உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.