Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (14:11 IST)
மிக்ஜாம் புயல் மற்றும் அதிக கனமழையயால் சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழை பாதிப்பு நிவாரண பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் நிதியுதவி கேட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று சென்னை வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்க் மழை வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த பின்னர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்,  ‘’அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏற்பட்டுள்ள ப பாதிப்புகளுக்கு அரசாங்கத்தால் என்ன முடியுமோ அதை செய்து தருவோம். வருங்காலத்தில் இதுபோன்ற வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments