செங்கல்பட்டு அருகே லோடு லாரி கவிந்து விபத்துக்குள்ளான நிலையில் சாலையில் சிதறிய தர்பூசணிகளை மக்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.
தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தர்பூசணிகள் அதிகளவில் அனுப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறாக தர்பூசணி ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்த நிலையில் செங்கல்பட்டு அருகே மாதுராந்தகம் சாலையில் பழுதாகி நின்றுள்ளது. லாரி பழுதாகி நிற்பது தெரியாமல் அவ்வழியாக வந்த மற்றொரு லாரி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இதில் லாரி கவிழ்ந்ததால் தர்பூசணிகள் சாலையில் சிதறி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கொட்டிக்கிடந்த தர்பூசணிகளில் உடையாத நல்ல தர்பூசணிகளாக பார்த்து வீடுகளுக்கு அள்ளிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K