Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”என்னை லவ் பண்ணலைனா..” லாரி டிரைவரின் லவ் டார்ச்சர்! பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

Prasanth Karthick
வியாழன், 4 ஏப்ரல் 2024 (11:07 IST)
கடலூரில் லாரி டிரைவர் காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்தியதால் பள்ளி மாணவி விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் 22 வயதான விஜய். லாரி டிரைவராக வேலை பார்த்து வரும் விஜய்க்கு சமீபத்தில் அதே பகுதியில் பள்ளியில் படித்து வரும் ப்ளஸ் 1 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறிய நிலையில் விஜய் போதைப்பழக்கத்திற்கு ஆளானதாக தெரிகிறது.

இதனால் விஜய்யுடன் பேசுவதை மாணவி நிறுத்திக் கொண்டுள்ளார். ஆனால் விஜய் தொடர்ந்து மாணவியை தன்னைக் காதலிக்கும்படி டார்ச்சர் செய்து வந்துள்ளார். மாணவி அதற்கு சம்மதிக்காத நிலையில், தன்னை பார்க்க தனியாக வருமாறும் இல்லாவிட்டால் வீட்டிற்கு வந்து பிரச்சினை செய்வேன் என்றும் விஜய் மிரட்டியுள்ளார்.

ALSO READ: வீட்டில் கொள்ளையடித்த திருடன்.. தனது ஆசிரியர் வீடு என தெரிந்ததும் அதிர்ச்சி!

இதனால் மாணவியும் விஜய் சொன்ன நாகம்பந்தல் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தான் இங்கு வருவதற்கு முன்பே கடைத்தெருவில் விஷம் வாங்கி குடித்துவிட்டு வந்ததாக மாணவி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் உடனடியாக மாணவியை ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தற்போது மாணவி சேர்க்கப்பட்டுள்ளார். மாணவி அளித்த வாக்குமூலத்தில் விஜய்யின் லவ் டார்ச்சரால் விஷம் குடித்ததாக கூறியுள்ள நிலையில், விஜய்யை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். லவ் டார்ச்சரால் மாணவி விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

1,600-ஐ கடந்த மியான்மர் நிலநடுக்க பலி.. ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவி..!

சென்னையில் இன்று இந்தியா-பிரேசில் கால்பந்து போட்டி: மெட்ரோவில் இலவச பயணம்..!

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments