சிவகங்கையில் தனிப்படையினரால் விசாரிக்கப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த நிலையில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மடப்புரத்தில் நகைகளை திருடியதாக காவல்துறை தனிப்படையால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்ட அஜித்குமார் என்ற கோவில் காவலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்கு நடந்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கொலை வழக்கில் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை அதிகாரப் போக்குக்கு எதிரான குரல்கள் எழத் தொடங்கியுள்ளது. அதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் காவல்துறையில் அதிகாரிகளுக்கு நேரடி கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத சிறப்பு தனிப்படைகளைக் கலைக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு பிரிவுகளை தவிர்த்து எந்த விதமான தனிப்படைகளையும் அமைக்கவோ செயல்படுத்தவோ கூடாது என உத்தரவு வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K