Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முடிகிறது நீதிமன்ற கெடு! உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா?

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (07:30 IST)
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்கு முன்னதாக நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18-ம் தேதிக்குள் அதாவது இன்றுக்குள் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. நீதிமன்றம் அளித்த கெடு இன்றுடன் முடிவடைவதால், உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  



 
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்த நிலையில் ஒருவருடம் ஆகிவிட்டபோதிலும் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை
 
இந்த நிலையில் இந்த தேர்தல் குறித்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளை விசாரணை செய்த நீதிமன்றம் கடந்த மே மாதமே தேர்தலை நடத்த உத்தரவிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் கேட்டதால் தேர்தல் நடைபெறவில்லை. இந்த நிலையில் நீதிமன்றத்தின் கெடு இன்று முடிவடைவதால் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுமா? அல்லது சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்படுமா? என்பது இன்று தெரிந்துவிடும்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments