Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தரமற்ற பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு - அன்பில் மகேஷ்

தரமற்ற பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு - அன்பில் மகேஷ்
, சனி, 18 டிசம்பர் 2021 (13:28 IST)
தமிழகத்தில் உள்ள தரமற்ற பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என  பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். 

 
நெல்லையில் உள்ள சாஃப்டர் என்ற பள்ளியில் கழிப்பறை சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததை அடுத்து இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 200 பள்ளி கட்டடங்களை இடிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டார்.  
 
இதனைத்தொடர்ந்து பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தரமற்ற பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

18 வயதில் பிரதமரை தேர்வு செய்யலாம், ஆனால் திருமணம் செய்யக் கூடாதா? ஒவைசி கேள்வி