Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'கேன்சர்' விழிப்புணர்வுக்காக, தானே 'மொட்டை' அடித்து தன்னை உலகளவில் கவனத்தை ஈர்த்த லயா ...

'கேன்சர்' விழிப்புணர்வுக்காக, தானே 'மொட்டை' அடித்து தன்னை உலகளவில் கவனத்தை ஈர்த்த லயா  ...
, செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (20:54 IST)
சேவை என்ற ஒரு விஷயத்தினை இளைய தலைமுறையினர் நாம் மறந்து போய் வருகின்றோம் என்று ?  பல லட்சம் ரசிகர்களை தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் மூலம் பதிவேற்றத்தின் மூலம் கவர்ந்த லயா கரூரில் பேட்டியளித்தார். 

பெண்களின் அழகே முடிதான் என்றிருக்கும்போது, 'கேன்சர்' விழிப்புணர்வுக்காக, தானே 'மொட்டை' அடித்து தன்னை உலகளவில் கவனத்தை ஈர்த்தது மட்டுமில்லாமல், மனித நேயம்; அன்பு, பாசம், உறவுகள், உறவு சிக்கல்கள், சமூக பிரச்னைகள்; உலகியல் நடப்புக்கள் என அனைத்து சமூக ஊடகங்களிலும் 500 க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்து, தனக்கென தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி முத்திரை பதித்து வரும் லயா., தொலைக்காட்சி நிகழ்ச்சி  தொகுப்பாளினியாக இருந்து, நடிகையாக உருவெடுத்துள்ள லயா., திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியை சேர்ந்த தர்மராஜ், ரூபிணி மூத்த மகள் லயா. பள்ளிப்படிப்பை திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் பள்ளியிலும், பி.காம்., இ-காமர்ஸ் படிப்பை ஜி.டி.என்., கலை அறிவியல் கல்லுாரியிலும் முடித்தவர். தற்போது சமூக வலை தளங்களில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு கடந்த ஓராண்டாக ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்களை பெற்று உள்ளார். சமூக ஆர்வலரும், பேஸ்புக் போராளியுமான லயா, கரூரில் உள்ள தனியார் அமைப்பு சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது.,  இளைய தலைமுறையினர் தற்போது சேவை என்ற ஒரு விஷயத்தினை நாம் மறந்து வருகின்றோம் என்றும், முதலில் நான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக இருந்தேன் என்றும், கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெட்கப்பட்டு வந்த நிலையில், நான் மொட்டை எடுத்துக் கொள்கின்றேன் என்று மொட்டை எடுத்துக் கொண்டேன், இன்றுவரை கேன்சருக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றேன் என்றும், மரம் வளர்ப்பது மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு ஆகியவைகளுடன் அனைத்து விழிப்புணர்வுகளும் நான் நடத்தி வருவதாகவும், என்னால் முடிந்த அளவில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றேன்.

இன்று வரை ஆங்கிலத்தினை ஒரு பேஷனாக பார்க்கின்றனர். ஆனால் நமது மூத்த மொழி, நமது தமிழ் மொழி., என்பதை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது, ஆகவே, அந்த வகையில் தமிழ் மொழியினை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்று நினைத்து நான் விழிப்புணர்வு நடத்தி வருகின்றேன், ஆகையால், செய்தியாளர்களுக்கு முதலில் நான் நன்றியை தெரிவிப்பதோடு, செய்தியாளர்களும் ஒரு சமூக ஆர்வலர்கள் தான் என்றும், இரவு பகல் என்று பார்க்காமல், எந்நேரமும் செய்திக்காக உழைப்பவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சத்துணவு அமைப்பாளரிடம் தகாத உறவு ... ஆசிரியரை வெளுத்து வாங்கிய ஊர் மக்கள்