Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தல் வேட்புமனு வாபஸ் – இன்றே கடைசி !

Webdunia
வியாழன், 2 மே 2019 (11:37 IST)
தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஏற்கனவே நடந்த 18 தொகுதி இடைத்தேர்தல்களோடு சேர்த்து மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் இந்த தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா சாவா எனும் நிலைமையில் உள்ளது.

இந்த இடைத்தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதால் திமுக மற்றும் அதிமுக ஆகியக் கட்சிகள் தீயாய் வேலைப்பார்த்து வருகின்றனர். வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 29 ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில் வேட்புமனுப்  பரிசீலனை நேற்றோடு முடிவடைந்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை திரும்பப் பெற இன்றேக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments