Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக பிரமுகரால் நிலம் அபகரிப்பு …சினிமா விமர்சகர் பிரசாந்த் டுவீட்…சுமந்த் ஆறுதல்

Advertiesment
திமுக பிரமுகரால் நிலம் அபகரிப்பு …சினிமா விமர்சகர் பிரசாந்த் டுவீட்…சுமந்த் ஆறுதல்
, புதன், 10 மார்ச் 2021 (21:40 IST)
தமிழ் சினிமா குறித்து விமர்சனம் செய்து வருபவர் பிரசாந்த் ரங்கசாமி. இவரது அப்பா தி.மு.க பிரமுகரால் ஏமாற்றப்பட்டதாகவும், அவரது நிலம் அபகரிக்கப் பட்டதாகவும்  குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

10 வருடம் முன்பு ஒரு தி.மு.க பிரமுகரால் என் அப்பா ஏமாற்றப்பட்டார், அவரது நிலம் அபகரிக்கப் பட்டது.அதில் மனம் உடைந்தார்,அவர் தொழில் முடங்கியது. 5 வருடம் கோர்ட்டிற்கு நாயாய் அலைந்து தீர்ப்பு பெற்று இருக்கிறோம்,ஆனால் இன்னும் ஏமாற்றப்பட்ட பணமோ இடமோ வந்த பாடில்லை. Cc @mkstalin  என்று கூறி இதை ஸ்டாலினிக்கு டுவீட் பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலிட்டுள்ள சுமந்த் ராமன் இதை டேக் செய்து, என்னுடைய  இரக்கம்…நீங்கள் இழந்த நிலத்தையும், பணத்தையும் மீண்டும் பெறுவீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

 இதற்கு பிரசாந்த் சுமந்த்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத 41 எம்.எல்.ஏக்கள் யார் யார்?