Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மானிய விலை ஸ்கூட்டர்! சென்னை வாழ் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Advertiesment
மானிய விலை ஸ்கூட்டர்! சென்னை வாழ் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!
, புதன், 30 ஜனவரி 2019 (11:06 IST)
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் வேலைக்கு போகும் பெண்கள் தமிழக அரசின் மானிய விலை இருசக்கர வாகனம் பெற வியாழக்கிழமைக்குள் (ஜன. 31) விண்ணப்பிக்கலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.


 
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
பணிக்குச் செல்லும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்கீழ், மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ்,  2017-18-ஆம் நிதி ஆண்டில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பணிபுரியும் 7,225 பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
இதைத் தொடர்ந்து,  2018-19-ஆம்  நிதி ஆண்டுக்கான மானிய விலையில் இருசக்கர வாகனம் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஜனவரி  21-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
தற்போது, இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை வியாழக்கிழமை (ஜனவரி 31) மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு, விரைவுத் தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கழிவறையை பயன்படுத்த தெரியாமல் சிக்கிக்கொண்ட பெண்: ரயிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்