நாடு முழுவதும் இன்றும், நாளையும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் நிலையில் நாளை 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசை கண்டித்து இன்று தேசிய அளவில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகத்திலும் 11 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து குறைந்துள்ளதால் மக்கள் பயணம் செய்ய முடியாமல் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 32 சதவீதம் பேருந்துகளே இயங்கி வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை பொதுமக்கள் நலன் கருதி 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், நாளைய போராட்டத்தில் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள், மற்ற சாதாரண ஊழியர்கள் வழக்கம்போல பணிக்கு திரும்புவார்கள் என போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.