Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர்களே 25 லட்சம் கொடுத்தார்கள்… நீங்கள் ஒரு கோடி கொடுங்கள்… பாஜக தலைவர் எல் முருகன் வேண்டுகோள்!

Webdunia
வியாழன், 13 மே 2021 (10:41 IST)
கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு இழப்பீடாக 25 லட்சம் வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் எல் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அறிவித்திருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த ஆட்சியிலும் கூட இதே ரூ.25 லட்சம் தான் இழப்பீடாக கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது ஏதோ அதிகப்படுத்தியிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது ஏமாற்றம் அளிப்பதோடு அதிர்ச்சியையும் அளிக்கிறது.

கடந்த ஆண்டு தி.மு.க. கூட்டணி கட்சியினர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

அ.தி.மு.க. அரசு முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை செய்தபோது கடுமையாக எதிர்த்த மு.க.ஸ்டாலின், இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போது மாற்றி பேசுவது அழகல்ல. ஆகவே உடனடியாக முதல்-அமைச்சர் தன் வாக்குப்படி உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments