Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கப்பல்ல வருது கச்சா எண்ணெய்.. லேட் ஆகும்ல! – பெட்ரோல் விலையேற்றத்திற்கு எல்.முருகன் பதில்!

கப்பல்ல வருது கச்சா எண்ணெய்.. லேட் ஆகும்ல! – பெட்ரோல் விலையேற்றத்திற்கு எல்.முருகன் பதில்!
, செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (19:35 IST)
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது குறித்து பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில் சமீப காலத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.100 ஐ தாண்டி பல இடங்களில் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து சரக்கு லாரிகள் வாடகை, விளைப்பொருட்கள் விலை என அனைத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் சில மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தும் வருகின்றன.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பேசிய பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் “பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை 2013-14ல் எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது என்பதை பார்க்க வேண்டும். அப்போதிருந்து இப்போது வரை விலை குறைவாகதான் உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மீது விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அரசாங்கம் அதை கவனத்தில் கொண்டுதான் இறக்குமதி செய்கிறது. கப்பலில் வருவதால் தாமதமாகலாம்.. போக்குவரத்து நேரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீரில் 11 மாதங்களுக்கு பின்னர் ரயில் சேவை தொடக்கம்