Publish Date: Mon, 07 Dec 2020 (11:05 IST)
Updated Date: Mon, 07 Dec 2020 (11:06 IST)
வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என நெல்லையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி.
தமிழகத்தில் கடந்த நவம்பர் 6 வேல் யாத்திரை தொடங்கிய நிலையில் தமிழக அரசு தடையை மீறி வேல் யாத்திரையை பாஜக நடத்தி வந்தது. இந்நிலையில், வேல் யாத்திரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என நெல்லையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியளித்தார்.
மேலும் அவர், கொரோனா ஊரடங்கு இருப்பதால் உள் அரங்கில் நிறைவு நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என கூறினார். அதோடு வேல் யாத்திரை மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும் என எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.