Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரசுடன் சேர்ந்து மிகப்பெரிய தவறு செய்து விட்டேன்: முன்னாள் முதல்வர் பரபரப்பு பேச்சு

Advertiesment
காங்கிரசுடன் சேர்ந்து மிகப்பெரிய தவறு செய்து விட்டேன்: முன்னாள் முதல்வர் பரபரப்பு பேச்சு
, ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (13:53 IST)
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன் என்று முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற போது இந்த தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை ஆனால் 80 தொகுதிகள் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்த குமாரசாமி கட்சியுடன் கூட்டணி வைத்தது என்பதும் குமாரசாமி இதில் முதலமைச்சர் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் ஒரு சில மாதங்களிலேயே இந்த ஆட்சி கவிழ்ந்து விட்டது. இந்த நிலையில் தற்போது குமாரசாமி இதுகுறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். காங்கிரசுடன் கூட்டணி வைத்து அதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் என்றும் நான் சேர்த்து வைத்திருந்த நற்பெயரை எல்லாம் இழந்து விட்டேன் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து இருந்தால் நான் இப்போது வரை முதலமைச்சர் பதவியில் நீடித்து இருப்பேன் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்
 
குமாரசாமி கூறியுள்ள இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திராவில் அடுத்தடுத்து 200 பேர் மயக்கம்: வித்தியாசமாக குரலில் கத்துவதால் பதட்டம்