Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனக்கும் கருணாநிதிக்குமான உறவை கொச்சைப்படுத்திய சிலர்... வருந்தும் குஷ்பு

எனக்கும் கருணாநிதிக்குமான உறவை கொச்சைப்படுத்திய சிலர்... வருந்தும் குஷ்பு
, திங்கள், 3 செப்டம்பர் 2018 (18:36 IST)
எனக்கும் கருணாநிதிக்கும் இருந்த உறவு தந்தை - மகள் உறவு. ஆனால், இதை சிலர் கொச்சைப்படுத்தி பேசினர் என குஷ்பு வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான செய்திகள் பின்வருமாறு...
 
நடிகை குஷ்பு அரசியலில் களமிறங்கிய போது திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். கட்சியில் இருக்கும் போது அவர் ஸ்டாலின் குறித்து எதோ கருத்தை தெரிவித்த காரணத்தால், தொண்டர்கள் அவரை வீட்டை தாக்கினர். 
 
இந்த சம்பவத்திற்கு பின்னர் குஷ்பு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அவருக்கு அங்கு கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், திமுக குறித்த தனது கருத்துக்களையும் குஷ்பு அவ்வப்போது கூறிவந்தார். 
 
அந்த வகையில், ஸ்டாலின் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் தலைவராக பொருப்பேற்ற போது இளவரசர் அரசராகிவிட்டார் என டிவிட்டரில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். 
 
சமீபத்தில் சென்னை சந்தோம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி அரங்கத்தில், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் புகழ் வணக்க கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற குஷ்பு பின்வருமாறு பேசினார்.
 
தமிழ்நாட்டு மக்களுக்காக இறுதி வரை போராடிய கலைஞர் கருணாநிதியிடம் இருந்து, நான் தமிழையும், அரசியலையும் கற்றுக்கொண்டடேன். எனக்கு தமிழ்மொழி மீதான பற்று வருவதற்கு காரணமே கருணாநிதிதான். 
 
மரியாதை என்பதற்கான அர்த்தத்தையும் கருணாநிதியிடம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்ட கொள்கைகளை கற்றுக் கொடுத்ததும் கருணாநிதிதான்.  ஆனால், எனக்கும் கருணாநிதிக்கும் ஆன உறவு தந்தை, மகள் போன்றது இதனை சிலர் கொச்சைப்படுத்தியும் உள்ளனர் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவரிடம் கிடைக்கவில்லை...அவனிடம் கிடைத்தது : அபிராமி பகீர் வாக்குமூலம்