Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீ இன்றி இது சாத்தியம் இல்லை : கனிமொழியை பாராட்டிய ஸ்டாலின்

Advertiesment
M.K.Stalin
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

 
நேற்று நடைபெற்ற கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
இதற்கான ஏற்பாடுகளை கனிமொழி சிறப்பாக செய்திருந்தாராம். விமான நிலையத்திலிருந்து தலைவர்களை அழைத்து வருவது, அவர்களை ஹோட்டலில் தங்க வைப்பது, அங்கிருந்து அவர்களை விழா மேடைக்கு அழைத்து வருவது, விழா முடிந்த பின் விமான நிலையத்திற்கு அழைத்து செல்வது என ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக ஒரு முக்கிய நபரை கனிமொழி நியமித்திருந்தாராம்.
 
அதேபோல், மேடையில் யார் யார் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்பது முதல் விழா மேடையில் இருக்கைகள் எந்த வரிசையில் போட வேண்டும் என்பது வரை கனிமொழி திட்டமிட்டு பணியாற்றினாராம். 
 
இதனால், விழாவிற்கு வந்த தலைவர்கள் ஸ்டாலினிடம் ‘ஏற்பாடுகள் பிரம்மாதம்’ என பாராட்டி சென்றார்களாம். இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து எல்லோரும் பாராட்டினார்கள். இந்த பெருமை உனக்கே சேரும் என கனிமொழியை ஸ்டாலினின் பாராட்டினாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2019 தேர்தல்: தெலுங்கு தேசத்தோடு இணைய முயற்சிக்கும் காங்கிரஸ்?