மீண்டும் திமுகவுக்கு செல்கிறாரா குஷ்பு?
கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாஜகவை அடுத்து இன்று திமுகவுக்கு ஆதரவாக அவர் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து கருணாநிதி சமாதிக்கு சென்று திமுக தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவேற்றி அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறியுள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டரில் ‘நன்றியுடன் நினைவு கூறுகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்ததால் குஷ்பு பாஜகவில் சேரப் போவதாக வதந்திகள் எழுந்த நிலையில் தற்போது திமுக தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் டுவிட்டையும் பதிவு செய்துள்ளதால் நெட்டிசன்கள் அவரை மீண்டும் திமுகவில் சேரப்போகிறாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்
ஆனால் திமுக தலைவர் மீது குஷ்பூ அவர்கள் மிகுந்த மரியாதையும் பாசமும் வைத்துள்ளதாகவும் அதற்காகவே அவர் டுவிட்டரில் அஞ்சலி டுவிட்டை பதிவு செய்ததாகவும் அவரது தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்