Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரொனோ தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டேன்: திருமுருகன் காந்தி

Advertiesment
கொரொனோ தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டேன்: திருமுருகன் காந்தி
, வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (18:19 IST)
சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கொரொனோ தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டேன். எனக்கு சிகிச்சையளித்து பாதுகாத்த அரசு மருத்துவமனையின் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், தலைமை மருத்துவர் குழுவிற்கும் தொடர்ந்து என் உடல்நிலையை கண்காணித்து ஆலோசனைகள் வழங்கி பாதுகாத்த தோழர்.மருத்துவர்.எழிலன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நோய்தொற்று செய்தியறிந்து தொடர்புகொண்டு ஆதரவளித்த ஐயா.வைகோ அவர்களுக்கும், தோழர்.திருமாவளவன் அவர்களுக்கும், தோழர். வேல்முருகன் அவர்களுக்கும், தோழர்.ஜவாஹிருல்லா அவர்களுக்கும் தோழர்.தெகலான்பாகவி அவர்களுக்கும், தோழர்.நெல்லை முபாரக் , தோழர்.முனீர், தோழர்.மணியரசன், தோழர்.அரங்ககுணசேகரன், தோழர்.கொளத்தூர் மணி, தோழர்.இராமகிருட்டிணன், தோழர்.ஹென்றி டிபென், தோழர்.பொழிலன், பேரா.நெடுஞ்செழியன் தோழர்.கனகராஜ், தோழர்.அப்துல்சமது, கே.எம்.செரீப், தோழர்.குடந்தை அரசன், தோழர்.நாகை.திருவள்ளுவன், தோழர்.பொன்னையன், தோழர்.வெண்மணி, தோழர்.இளமாறன், தோழர்.கண.குறிஞ்சி, தோழர்.கோபி.கந்தசாமி, தோழர்.பொன்னையன், பேரா.ஜெயராமன், ஐயா.இளவழகன், , ஐயா.செந்தலை கவுதமன் தோழர்.பேரா.திருமாவளவன் தோழர்.அன்புவேந்தன், தோழர்.அமரந்தா, பேரா.நீலகண்டன், தோழர்.நடராசன், மரு.சிவராமன், பூவுலகு சுந்தர்ராசன், தோழர்.சுந்தரவள்ளி, தோழர்.சேனன், தோழர்.காசு.நாகராசன், தோழர்.செவ்வேள், தோழர்.ஆரோக்கியராஜ், மரு.மாரிராஜ், தோழர்.வக்கீல் அகமது,  மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவகுழு தலைவர் வழ.நிஜாம், தோழர்.பாபு ஜெயக்குமார், தோழர்.அருள் எழிலன், தோழர்.கவின்மலர் மற்றும் ஊடக தோழர்கள், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தோழமைகள் என நலம் விசாரித்த அனைத்து தோழமைகளுக்கும், சமூக வளைதளங்களின் வழி அன்பை வெளிப்படுத்திய தோழமைகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் - 2 படப்பிடிப்பில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 4 கோடி இழப்பீடு !