Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்மின் மேல பழிபோட மாட்டேன்: கட்சி மாறினாலும் குஷ்புக்கு குசும்பு குறையல...

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (12:41 IST)
மோடியை விமரித்தது குறித்த கேள்விக்கு எச்.ராஜாவை கலாய்க்கும் தோணியில் பதில் அளித்தார் குஷ்பு. 
 
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு திடீரென அக்கட்சியிலிருந்து விலகி நேற்று பாஜகவில் சேர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி மாறிய விவகாரத்தில் குஷ்பு மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 
 
அதில் குறிப்பாக பாஜகவையும் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளீர்கள். ஆனால் தற்போது அதே கட்சியில் இணைந்து இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பாஜகவை விமர்சித்துள்ளேன். பல  ட்விட்டுகளை பதிவிட்டுள்ளேன். அதெல்லாம் என் அட்மின் பதிவிட்டது என நான் சொல்லமாட்டேன் என எச்.ராஜாவை கலாய்க்கும் தோணியில் பதில் அளித்தார். 
 
மேலும், நான் காங்கிரஸில் இருந்த போதும் முத்தலாக் போன்ற சட்டத்திற்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறேன். மோடியையும் பாராட்டி இருக்கிறேன், ஏதோ எதிர்க்க வேண்டும் என்பதற்காக அனைத்தையும் எதிர்க்கவில்லை. எதிர்க்கட்சி என்பது எதிர்ப்பதற்காக மட்டுமல்ல அதற்கான தீர்வையையும் காண்பது தான் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரம் முழுவதும் நெகட்டிவ்.. இன்றும் பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது இன்னொரு வழக்கு: மீண்டும் கைது செய்த போலீசார்..!

6 ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. கடும் எதிர்ப்பு கிளம்புமா?

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments