Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

படுக்கைக்கு மறுத்ததால் வாய்ப்பு இல்லையெனில் நடித்தவர்கள் அப்படியா? - குஷ்பு கேள்வி

Advertiesment
Kushboo
, ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (14:32 IST)
நான் மற்றும் என்னுடைய சக நடிகைகள் நடித்த காலத்தில் பாலியல் தொல்லைகளை சந்திக்கவில்லை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

 
இதுவரை எந்த புகாரில் சிக்காத கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து வேறு சில பெண்களும் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என தொடர்ந்து புகார் கூறியது மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. என்  மீது தவறிருந்தால் வழக்கு தொடுக்கலாம். காத்திருக்கிறேன் என வைரமுத்து கூறிவிட்டார். 
 
ஆனாலும், அவர் மீது தொடர் புகார்கள் குவிந்து வருகிறது. பாடகர் மலேசியா வாசுதேவன் மருமகளான ஹேமாமாலினியும் வைரமுத்துக்கு எதிராக டிவிட் போட இந்த விவகாரம் டிவிட்டரில் பற்றி எரிகிறது. 
 
இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பு, தான் பார்த்ததிலேயே பெண்களிடம் மிகவும் கண்ணியமாக நடப்பவர் வைரமுத்து என தெரிவித்துள்ளார்.
 
மேலும், படுக்கைக்கு மறுத்ததால் சில படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என சில நடிகைகள் கூறுகின்றனர். அப்படியெனில், அந்த படங்களில் நடித்த நடிகைகள் தவறானவர்களா? என கேள்வி எழுகிறது. எனவே, புகார் கூறும் முன் என்ன பேச வேண்டும் என யோசித்து பேச வேண்டும். நான் 30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் இருக்கிறேன். ஆனால், பாலியல் தொல்லைகளை சந்திக்கவில்லை. 
 
வைரமுத்து பற்றி சின்மயி புகார் கூறியுள்ளார். ஆனால், அதேசமயம், வைரமுத்துவிற்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். மீ டு இயக்கம் தேவைதான். ஆனால், அதை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடது. நீங்கள் பாலியல் தொல்லைகளை சந்தித்தால் உடனடியாக அதை அம்பலப்படுத்த வேண்டும். பெயரை மற்றும் கூறி ஒருவரை குற்றம் சொல்லாமல், சட்ட ரீதியாக அணுக வேண்டும் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீ டு’ இயக்கத்தை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது : நீதிமன்றம் எச்சரிக்கை