Publish Date: Sun, 26 Sep 2021 (08:43 IST)
Updated Date: Sun, 26 Sep 2021 (08:46 IST)
வங்க கடலில் உருவான குலாப் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அழ்ந்த காற்றழுத்த மண்டலமாக உருவான நிலையில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று மாலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குலாப் புயலால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இன்று இன்று தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.