மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீர வசந்தராயர் மண்டபத்தை புனரமைக்க ரூ.10 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்த புள்ளி விண்ணப்பம் திரும்ப செலுத்த வருகின்ற 27 தேதி 3 மணிவரை அவகாசம் என்றும், கோயில் புனரமைப்பு பணிகளை 36 மாதத்தில் முடிக்க கால அவகாசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயில் நிர்வாகம் சார்பாக கற்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், தூண்கள், சிம்ம பீடம், சிம்மம், உத்திரம், கபோதகம்,கொடிவாலை, நடகசட்டம் என பழமை மாறாமல் கலைநயமிக்க வகையில் புணரமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு யாரும் ஒப்பந்தப் புள்ளியை எடுக்க முன்வராத நிலையில் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒப்பந்தம் எடுக்க ஒப்பந்ததாரர்கள் முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.