Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நிரந்தர நீக்கம்!

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (12:32 IST)
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் சமீபத்தில் பாஜகவில் சேரப்போவதாக ஒரு வதந்தி கிளம்பியது. மேலும் கு.க.செல்வம் டெல்லி சென்று பாஜக பிரமுகர்கள் சிலரை சந்தித்ததாகவும் கூறப்பட்டது 
 
அதுமட்டுமின்றி டெல்லியில் இருந்து சென்னை வந்த பின்னரும் அவர் திமுக தலைவர் மீது குற்றம்சாட்டு கூறியதோடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் சென்றார். இந்த நிலையில் கு.க.செல்வம் அவர்களை திமுக தலைமை சஸ்பெண்ட் செய்தது. மேலும் அவரை ஏன் நிரந்தரமாக நீக்கம் செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபப்ட்டிருந்தது. 
 
இந்த நிலையில் சஸ்பெண்ட் குறித்து கு.க.செல்வம் அளித்த விளக்கம் திருப்தியாக இல்லை என்று கூறியுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் கு.க.செல்வம் தொடர்ந்து செயல்பட்டதால் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து திமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments