Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு எதிர்கட்சியாகணும்னு ஆசை போல! – ரூட்டை மாத்தி விட்ட கடம்பூரார்!

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (12:25 IST)
பாஜக மாநில துணைத்தலைவர் பேசிய கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அதற்கு புதுவிதமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக மாநில துணை தலைவர் விபி துரைசாமி “தமிழகத்தில் திமுக Vs அதிமுக என்ற நிலை தற்போது மாறி திமுக Vs பாஜக என மாறியுள்ளது” என கூறியது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்வரும் தேர்தலில் பாஜக தலைமையின் கீழ் கூட்டணி அமைக்கும் கட்சிகள் வெற்றி பெறும் எனவும் அவர் பேசியிருந்தார்.

வி.பி.துரைசாமியின் கருத்துக்கள் பாஜகவின் கருத்தாக பார்க்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ ”தமிழகத்தில் திமுக Vs பாஜக என்ற நிலை யார் எதிர்கட்சியாக வருவார்கள் என்பதில் இருக்கலாம். பாஜக எதிர்கட்சியினர் ஆக விரும்புகிறார்கள். 2011ல் அதிமுகவின் கூட்டணியில் தேமுதிக வென்று எதிர்கட்சியாக அமர்ந்தது போல பாஜகவும் விரும்புகிறார்கள் போல” என்ற ரீதியில் பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடித்து துவைக்கும் வெயில்.. இனி மதியம் வரை மட்டுமே வேலை! - ஒடிசா அரசு அறிவிப்பு!

1 லட்ச ரூபாய் பில்லா? நீங்க கரண்ட் பில் கட்டாம இருந்துட்டு..!? - கங்கனாவை வறுத்தெடுத்த மின்வாரியம்!

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

அடுத்த கட்டுரையில்
Show comments