Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் உடன் வைகோ எப்போதும் சரிப்பட்டு வரமாட்டார்: கே.எஸ்.அழகிரி

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (11:23 IST)
திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கொள்கைகளில் வேறுபட்டிருந்தாலும் தேர்தல் அரசியல் காரணமாக ஒரே கூட்டணியில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் உண்டு. அதேபோல் விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையையும் கருத்து வேறுபாடுகள் அதிகம் உண்டு. குறிப்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காங்கிரஸுடன் எப்போதும் சரிப்பட்டு வரமாட்டார்
 
எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் மதச்சார்பின்மை என்ற ஒரே கொள்கைதான் எங்களை ஒற்றுமையாக இணைந்து ஒரே கூட்டணியில் வைத்துள்ளது என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார் 
 
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்பட பல கட்சிகள் இருக்கும் என்றாலும் அவை மதச்சார்பின்மை என்ற ஒற்றை கொள்கை அடிப்படையில் தான் ஒரு கூட்டணிகள் போட்டியிட உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. கடும் எதிர்ப்பு கிளம்புமா?

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments