Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி

7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி
, வெள்ளி, 21 மே 2021 (10:34 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக தமிழ் அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் 20 ஆண்டுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்
 
இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு நேற்று குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியது. இந்த கடிதத்திற்கு குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுத்து 7 தமிழர்களை விடுதலை செய்ய ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் சற்றுமுன் அளித்த பேட்டியில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
திமுகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மு.க.ஸ்டாலின் எனது இல்லத்திற்கு வந்தால் மகிழ்வேன்: முக அழகிரி பேட்டி