பிடிச்ச இடத்த எடுத்துக்கோங்க.. அள்ளிக் கொடுத்த திமுக! – ஆச்சர்யத்தில் காங்கிரஸ்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (11:18 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விருப்பமான இடங்களை காங்கிரஸ்க்கு அளிப்பதாக திமுக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை போல உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் – திமுக கூட்டணி தொடரும் என கூறப்பட்டுள்ளது. கூட்டணி பங்கீடுகள் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் குறித்து இன்று திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதன்பின்னர் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ”நகர்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் விரும்பும் இடங்களை அளிக்க பரிசீலனை செய்வதாக திமுக உறுதி அளித்துள்ளது. மாவட்ட அளவிலான பேச்சுவார்த்தை சரியாக செயல்பட்டு கேட்கும் இடங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments