Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்துறையை மொத்தமா அழிச்சிடுவாங்க போல..! – கே.எஸ்.அழகிரி கண்டனம்!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (13:59 IST)
மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பது குறித்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

மத்திய அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மருத்துவம், பொருளாதார, தொழில் முதலீடு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்ட நிலையில் நிதி சேகரிக்க பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்டவற்றின் பங்குகளை விற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ”ஒவ்வொரு நாடும் ஒரு காலத்தில் எழும், ஒரு காலத்தில் விழும். நேரு சிறந்தநாட்டை உருவாக்கினார். பொதுத்துறையும் வேண்டும், தனியார்துறையும் வேண்டும். மத்திய அரசு பொதுத்துறையை அழிக்க நினைக்கிறது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் பொதுத்துறையை நசுக்க நினைப்பது நல்லதல்ல” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments