Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயற்றலும் ஈட்டலும் காத்தலும்..! – 2 திருக்குறள்களை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்!

Advertiesment
இயற்றலும் ஈட்டலும் காத்தலும்..! – 2 திருக்குறள்களை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்!
, திங்கள், 1 பிப்ரவரி 2021 (12:34 IST)
மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட்டை வாசித்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவது குறித்து திருக்குறளை உதாரணம் காட்டியுள்ளார்.

மத்திய அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா பாதிப்பிற்கு பிறகு தாக்கலாகும் பட்ஜெட் என்பதால் பலரும் இதை தீவிரமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

வழக்கமாக பட்ஜெட் தாக்கலின்போது திருக்குறளில் ஏதாவது ஒன்றை மேற்கோள் காட்டும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போதும் ஒரு குறளை உதாரணம் காட்டியுள்ளார்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

என்ற இறைமாட்சி அதிகாரத்தில் உள்ள திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார்.

அதன் பொருள் “பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.” என்பதாகும்.

அதே போல

“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.”
என்ற குறளையும் நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டியுள்ளார்

அதன் பொருள் “நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.” என்பதாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துறைமுகத்தில் தனியார் பங்களிப்பு; ‘அதானி.. அதானி’ என கத்திய எதிர்க்கட்சிகள்!