Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வருமான வரி, தொழில் வரி சலுகைகள் என்ன? – மத்திய பட்ஜெட்!

வருமான வரி, தொழில் வரி சலுகைகள் என்ன? – மத்திய பட்ஜெட்!
, திங்கள், 1 பிப்ரவரி 2021 (13:28 IST)
மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் நடந்து வரும் நிலையில் வருமான வரி மற்றும் தொழில் வரிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா பாதிப்பிற்கு பிறகு தாக்கலாகும் பட்ஜெட் என்பதால் பலரும் இதை தீவிரமாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

சுகாதாரம், ரயில்வே உள்ளிட்டவற்றிற்கு பட்ஜெட் அறிவிப்புகள் வெளியான நிலையில் வருமான வரி மற்றும் தொழில் வரி குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, வரி ஏய்ப்பவர்களை கண்டறிய நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்படும்
பிப். மாத செலவுகளை பூர்த்தி செய்ய 80,000 கோடி கடன் பெற மத்திய அரசு முடிவு 

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

வரித்தணிக்கை வரம்பு 5 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்வு

குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கான வரிச்சலுகை வரும் 2022ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு 

சிறிய அளவிலான வருமான வரி சச்சரவுகளை தீர்த்து வைக்க புதிய குழு அமைக்கப்படும்

பொருளாதாரத்தை சீரமைக்க 80,000 கோடி நிதி ஒதுக்கீடு 

சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய பட்ஜெட் 2021 எதிரொலி: 1600 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ்