Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகுதி பங்கீடு ? ஸ்டாலினை சந்திக்கும் குண்டுராவ், அழகிரி!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (09:52 IST)
இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி சந்திக்கின்றனர். 
 
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் இந்த முறை தரக்கூடாது என திமுக தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. திமுக தலைவர் முக ஸ்டாலின் இம்முறை காங்கிரஸ்க்கு ஒற்றை இலக்கங்களில் தான் தொகுதிகள் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் கேஎஸ் அழகிரியும் சரி, தினேஷ் குண்டுராவும் சரி, கூட்டணியில் தொகுதிக்காக பேரம் பேச போவதில்லை. அதிகமாகவும் கேட்கமாட்டோம், குறைவாகவும் பெறமாட்டோம் தேவையானதை பெறுவோம் என தெரிவித்துள்ளனர். 
 
இதனிடையே இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் 2021 சட்டமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகிலேயே மிக சுவையான பீர்! இந்திய பீர் வகைக்கு கிடைத்த உலகளாவிய விருது!

மது போதையில் நடனமாட சொன்ன மணமகன் நண்பர்கள்: மணமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

கமலா ஹாரிஸின் பாதுகாப்பு திடீர் ரத்து: அமெரிக்க ரகசிய சேவை விளக்கம்

புல்லட் ரயில் பயணம்.. செமி கண்டக்டர் ஆலை விசிட்! பரபரக்கும் பிரதமரின் ஜப்பான் பயணம்!

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்.. பூத் கமிட்டி அமைப்பது குறித்து முக்கிய ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments