Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடகொரியா: அமெரிக்க சினிமாவைப் பார்த்த இரு மாணவருக்கு தூக்கு!

வடகொரியா:  அமெரிக்க சினிமாவைப் பார்த்த இரு மாணவருக்கு தூக்கு!
, புதன், 7 டிசம்பர் 2022 (20:29 IST)
வடகொரியாவில் தடை செய்யப்பட்ட சினிமாவை பார்த்த 2 பள்ளி மாணவர்கள் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, மக்கள் என்ன உணவை உண்ண வேண்டும்! எப்படி உடுத்த வேண்டும், எப்படி சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை கிம் ஜாங் உன்னின் உத்தரவின்படி தான் செய்ய வேண்டும்.

அதேபோல், எதிரி நாடுகளின்( அமெரிக்கா, தென் கொரியா ) தயாரிப்பான  சினிமா, வெப் தொடர்களைப் பார்த்தால் கடும் தண்டனை விதிக்ககப்படும் என எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில்,  அங்குள்ள ரியாங்காங் என்ற மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் உயர் நிலை படிக்கும் இரு மாணவர்கள் அமெரிக்க நாட்டு சினிமாவை பென் டிரைவ் மூலலம் பார்த்ததாக கூறப்படுகிறது.
 

ALSO READ: ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா
 
இதையடுத்து, இவர்கள்  அக்டோபர் மாதம் ஓரு நகரில் விமான ஓடுபாதையில் மக்கள் நேரில் காணும் வகையில், தூக்கில் போடப்பட்டுள்ளனர்.

இது உலக நாடுகளையே அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க திட்டம்: அதிர்ச்சி தகவல்