Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுழற்சி முறையில் கடைகள் - கோயம்பேடு சந்தையில் புதிய நெறிமுறை!

Advertiesment
சுழற்சி முறையில் கடைகள் - கோயம்பேடு சந்தையில் புதிய நெறிமுறை!
, திங்கள், 12 ஏப்ரல் 2021 (09:58 IST)
கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று முதல் சுழற்சி முறையில் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

 
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதற்கு சில்லறை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 
 
இதனை ஏற்று, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று முதல் சுழற்சிமுறையில் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 1,800 கடைகளில், ஒற்றைப்படை எண் கொண்ட 900 கடைகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் திறக்கப்பட உள்ளது. இதேபோல், இரட்டைப்படை எண்களை கொண்ட கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1.68 லட்சத்தை தாண்டிய தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!