Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷனில் டிரான்ஸ்ஃபார்மர் வெடிப்பு! பயணிகள் அதிர்ச்சி

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (17:01 IST)
நேற்று இரவு உயர் மின் அழுத்த கோளாறு காரணமாக தண்டையார்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று காலை முதல் மீண்டும் வழக்கம்போல் மெட்ரோ ரயில் சேவை தொடர்ந்து வருகின்றது
 
இந்த நிலையில் இன்று அதிகாலை கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷனில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர்  திடீரென வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம்  இன்று அதிகாலை 1:30 மணிக்கு நடைபெற்றுள்ளதால் நல்ல வேளையாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும் இதுகுறித்த தகவல்களையும், இணையத்தில் வைரலாகும் வீடியோவையும் பார்த்த மெட்ரோ ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
சரியான பராமரிப்பின்மை காரணமாகவே டிரான்ஸ்பார்மர் வெடித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இனிமேலாவது சரியான முறையில் மின் உபகரணங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்துக்கு சொந்தமான டிவி சேனல்கள் நீக்கம்: கேபிள் ஆப்பரேட்டர்கள் அதிரடி..!

10ஆம் வகுப்பு துணைத் தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது?

மாயமான 7 போலீசார் திரும்பி வந்ததாக தகவல்.. என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments