மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவசம் என சலுகை அறிவித்துள்ள டெல்லி அரசின் அறிவிப்புக்கு ஒப்புக்கொள்ளக்கூடாது என மெட்ரோ மேன் என அழைக்கப்படும் இ.ஸ்ரீதரன் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
டெல்லியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'டெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவசம் என்ற அதிரடி அறிவிப்பை அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் மெட்ரோ மேன் என அழைக்கப்படும் இ.ஸ்ரீதரன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது
மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவசம் என சலுகை அறிவித்துள்ள டெல்லி அரசின் அறிவிப்புக்கு ஒப்புக்கொள்ளக்கூடாது. கடந்த 2002ஆம் ஆண்டு மெட்ரோ திட்டம் ஆரம்பிக்கப்படும்போதே, அதன் கொள்கையில் 'இலவச சலுகைகள் வழங்கப்பட கூடாது என்ற குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலின் தொடக்கவிழாவில் அப்போதைய பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் கூட டோக்கன் வாங்கியே மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் என்று அவர் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து பெண்களுக்கு மெட்ரோ என்ற டெல்லி அரசின் அறிவிப்புக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது